ESSAATN AND TAMILNADU PUBLIC MOURN SUDDEN DEMISE of Hon CM J JAYALALITHA
Submitted by admin on Tue, 06/12/2016 - 04:50
Undefined
WE HAVE LOST OUR MOTHER AMMA
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற்று வருகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன. போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.