ஜாதவ்வை அணுகுவதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு

Submitted by admin on புத, 19/04/2017 - 08:38
தமிழ்
பாகிஸ்தான் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்த இந்திய முன்னாள் கப்பற்படை கமாண்டர் குல்பூஷன் யாதவை தூதரகம் மூலமாக அணுகுவதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்து விட்டது.
“சட்டப்படி குல்பூஷன் யாதவ்வை சந்திக்க அனுமதி இல்லை. அவர் வேவு பார்க்கும் சதிவேலையில் ஈடுபட்டதால் சட்டப்படி அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படமாட்டாது”என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தெரிவித்தார்.
ஆனால் அனுமதி மறுப்பு பற்றி தங்களுக்கு அதிகாரபூர்வமாக எதுவும் செய்தி வரவில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது.
Keywords: குல்பூஷன் ஜாதவ், மரண தண்டனை, பாகிஸ்தான், இந்தியா, அணுக அனுமதி மறுப்பு, உலகம், இந்தியா-பாகிஸ்தான்
Post Categories: