RESOLUTIONS ADOPTED ON 24 JUNE 2018
1. பொருள்:முன்னாள் இராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம்,கேண்டீன் மற்றும் ECHSக்கு நிலம் ஒதுக்கியதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல். |
தீர்மானம்: மே 17ம் தேதி நடந்த சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட தலைவரும் மாநில நிர்வாகிகளும் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கேண்டீன் உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பித்தனர். அதன் தொடர்பாக அலோசித்து ECHS மற்றும் CSD கேண்டீனுக்காகவும் நலவாரிய அலுவலகத்திற்கென ஒன்றரை ஏக்கர் அளவிற்கு நிலம் ஒதுக்குவதாக அறிவித்தார். அச்செய்தி தினசரியிலும் பிரசுரமானது. அதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி S மலர்விழி I.A.S அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பிலும் தருமபுரி முன்னாள் இரானுவத்தினர் சமுதாயத்தின் சார்பிலும் மிகுந்த நன்றி தெரிவித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. |
2.பொருள்:CSD,ECHS தகுந்த நிலம் ஒதுக்கீடு பற்றிய கோரிக்கை. |
தீர்மானம்: வங்கிகணக்குகள் துவங்க மற்றும் மூட மாநில செயற்குழுவுக்கு மட்டுமே அதிகாரமுண்டு எனவும் மாவட்ட அல்லது வட்ட செயற்குழுக்கள் வங்கி கணக்கினை பராமரிக்க அல்லது பரிவர்த்தனை செய்ய சம்பந்தப்பட்ட கிளைக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அசாதாரண சூழ்நிலைகளில் வங்கி கணக்கை முடக்கவோ அல்லது பரிவர்த்தணைகளுக்கு வேறு நபர்களை நியமிக்கவோ மாநில செயற்குழுவிற்கு அதிகாரமுண்டு எனவும் இவ்விவகாரத்தில் மாவட்ட செயற்குழுவின் வரம்பில் வரும்பொழுது மாநில செயற்குழு சம்பந்தப்பட்ட மாவட்ட செயற்குழுவின் ஆலோசனைகளை பெற்று அதன்மீது ஆலோசித்து செயல்படவேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. முதலாவது தீர்மானத்தின்படி செயல்பட அனைத்து உறுப்பினர் மற்றும் புதிதாக இணைபவர்களின் விவரம் முன்கூட்டியே நம்மிடம் இல்லை என்பதாலும் பெறப்படும் படிவங்களை பொறுத்து வங்கி கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் துவங்கலாம் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வாறு துவங்கப்படும் வங்கி கணக்குகளை சங்க மாநில செயலாளர் திரு K.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி இணைந்து செயலாற்ற வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள ஆறு வங்கி கணக்குகளையும் சங்க மாநில செயலாளர் திரு K.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி இணைந்து செயலாற்ற வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் இதற்கு முன் CBI:Acno 3081504503, IOB:Acno 078501000015319 ஆகிய கணக்குகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்களை நீக்கிவிட்டு மாநில செயலாளர் திரு K.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி இணைந்து செயலாற்ற அணுமதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
3.பொருள்: தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் ஆபிசர் கமாண்டிங், சென்னை(GOC, DHAKSIN BHARATH AREA, CHENNAI-9) அவர்களுக்கு சிறப்பு வேண்டுகோள். |
தீர்மானம்: மாவட்ட நிர்வாகம் ஒதுக்கும் நிலத்தை பெற்று கேண்டீன், ஈ சி எச் எஸ் ஆகியவற்றிற்க்கான கட்டிடங்களை கட்டும் பனி உடனே மேற்கொள்ளுமாறு விண்ணப்பிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் MD, ECHS, DELHI CANTT-க்கும் விண்ணப்பிப்பதென ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
4.பொருள்: கேண்டீன் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வாடகை கட்டிடம் ஏற்பாடு. |
தீர்மானம்:கேண்டீன் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை அந்த கால கட்டத்தில் தருமபுரியில் ஏற்படுத்தப்படும் கேண்டீன் இலாபம் ஈட்டும் வரை கேண்டீனுக்கான கட்டிடத்தை வாடகைக்கு சங்கம் சொந்த செலவில் அமர்த்தி தருமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. வடகைக்கு அமர்த்துவது நிர்வாகத்திற்கு ஏற்றார்போல் வருடகால ஒப்பந்தத்திலோ அல்லது அதன் மடங்குகளாக அமர்த்தி தரலாம் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஏற்பாடானது சங்க முன்னோடிகளின் சுய சிந்தனையில் உருவான திர்வு என்றும் இதில் எந்த அதிகாரிக்கோ அல்லது வெளி நபர்களுக்கோ சம்பந்தமில்லை என உறுதியளித்தும் மற்றும் இத்திட்டம் தருமபுரி முன்னாள் இராணுவத்தினர் சமுதாயத்திற்கு பயன்படும் என்கின்ற வகையில் நமது பங்களிப்பை ஜிஓசி (GOC,DHAKSHIN BHARATH AREA,CHENNAI) அவர்கள் ஏற்று கேண்டின் அமைக்கவேண்டி பனிவுடன் விண்ணப்பிப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
5. பொருள்: கூட்டுறவு சங்கம் ஏற்படுத்துதல் |
தீர்மானம்: கடந்த 2017ம் வருடம் ஜூலைமாதம் முதல் நாம் முயற்சிக்கும் ஒரு திட்டம் தான் வெடரன் கூட்டுறவு சங்கமாகும். அதற்காக நாம் கூட்டங்களை கூட்டி பரப்புரை செய்து உறுப்பினர்களை திரட்டி முன்மொழிதலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தோம். 82 உறுப்பினர்கள் பங்குதொகையினை செலுத்தியுள்ளார்கள். அந்த தொகை பொருளாளர் திரு விநாயகமூர்த்தி வசம் உள்ளது. மேலும் தற்பொழுது கிடைத்த தகவலின்படி கள அதிகாரி வாய்மொழியாக ஒப்புதல் அளித்துள்ளார். அவரிடமிருந்து கடிதம் பெற்றபின் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்கப்படும். மேலும் சட்ட விதிமுறைகள் அலுவலரால் வழங்கப்பட்டபின் சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் செயல்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விருப்பமில்லாதவர்கள் அவர்களது பங்குதொகையை வங்கி கணக்கு துவங்கும் முன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகின்றது. அதேபோல் இணைய விருப்பமுள்ளவர்கள் பங்கு தொகையினை செலுத்தலாமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. |
16. பொருள்: முன்னாள் இரானுவத்தினர் நலவாரிய அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டிய சேவைகள் பற்றி. |
தீர்மானம்: தற்பொழுது அனைத்து சேவைகளும் இனையதள முறையில் செயல்படுத்துவதால் நலவாரிய அலுவலகத்திலேயே அணைத்து ஆன்லைன் சேவைகளையும் வழங்கப்படவேண்டும் என்றும், நல வாரிய அலுவலகத்தில் செய்யவேண்டிய சேவைகளை தனியார் மையங்களுக்கு அனுப்புவதை நிறுத்தவேண்டும் என்றும் உடனடியாக தருமபுரி மாவட்டத்திற்கு தனி உதவி இயக்குனரை நியமிக்க வேண்டுமென நிர்வாகத்திடம் வலியுறுத்துவதென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
7.பொருள்:சங்கத்தின் சட்ட திட்டங்களை ஆங்கிலத்தில் புதுப்பித்தல் |
தீர்மானம்: சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தமிழகம் முழுவதும் அணைத்து மாவட்டங்களிலும் சேவைகளை தொடங்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டியும் நமது சங்கத்தின் சட்ட திட்டங்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது அவசியமாகின்றது. மேலும் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு அதிக தூரம் பயனம் செய்யவேண்டியுள்ளதால் மாவட்டம் மற்றும் வட்ட கிளைகள் ஏற்படுத்துவதென முன்பே 2016ல் தீர்மானிக்கப்பட்டு கடந்த மாநாட்டில் துவங்கி கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தி வரப்படுகின்றது அத்தகைய அமைப்பிற்கு ஏற்றவாறு புதிய சட்டதிட்டங்களை ஏற்படுத்திவருகின்றோம். ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்ட இச்சட்டதிட்டங்களை ஏற்பதாக ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. இந்த புதிய bylaws க்கு பதிவாளர் அங்கிகாரம் வழங்கவேண்டுமென விண்ணப்பித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. |
8.பொருள்: கிளைகள் தங்களின் நிதி திட்டங்களை செயல்படுத்துதல். |
தீர்மானம்: கிளைகள் தங்களின் நிதி திட்டங்களை தீட்டவும் செயல்படுத்தவும் அங்கிகாரம் உண்டு ஆனால் அனைத்து நிதி வரவுகள் மாநில சங்கத்தினால் வழங்கப்பட்ட இரசீது படிவங்கள் மூலமாக அடிக்கட்டுடன்(Corbon copy/duplicate copy) உரிய நபர்களால் ஒப்பமிடப்பட்டு அல்லது வங்கி பரிமாற்றங்கள் மூலமாகமட்டுமே பெறவேண்டும் எனவும் அணத்து நிதி வரவுகள் வங்கிகணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. கடன் மூலமாகவோ அல்லது காலமுறையில் செயல்படுத்தப்படும் திட்டமாகவோ இருந்தால் கண்டிப்பாக மாவட்ட , மாநில செயற்குழுக்களின் அனுமதி பெற வேண்டும் என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
9.பொருள்:சொத்துக்கள் பெறுதல் மற்றும் பராமரித்தல் பற்றி. |
தீர்மானம்: திரட்டப்பட்ட அல்லது பெறப்பட்ட நிதி, சொத்துக்கள் மற்றும் வளங்கள் யாவும் ”முன்னாள் தரை கடல் வான் படை வீரர்கள் சங்கம், தமிழ்நாடு (ESSAAA,TN)” அதாவது நமது சங்கத்திற்கு சொந்தமானதாகும். அனுபவிக்கும் உரிமை மட்டுமே கிளைகளுக்குரியதாகும். அசையா சொத்துக்கள் யாவும் சங்கத்தின் பெயரில் மட்டுமே ஏற்படுத்தவேண்டும். தனி நபர்களின் பெயரிலோ அல்லது கூட்டு அமைப்பின் பெயரிலோ ஏற்படுத்தக்கூடாதென்று ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. சொத்துக்களை மாற்ற விற்க அல்லது துறக்கும் எந்த நடவடிக்கையும் முழு கோரத்துடன் எடுக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கிளையின் தீர்மானத்தின் மேல் மாவட்ட மாநில செயற்குழுக்களால் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவினால் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டுமமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்கள், அதன் உரிமைக்கான ஆவணங்களின் நகல்கள் மற்றும் பராமரிப்பு விவரங்களை செயற்குழு நபர்களின் கவணத்திற்கு வந்த உடனே மாவட்ட மற்றும் மாநில செயற்குழுக்களுக்கு அனுப்பவேண்டும் எனவும், இவ்விவரங்கள் சேகரிப்பில் ஏதாவது தடங்கள் இருந்தால் மேல்நிலை குழுவிற்கு தெரியபடுத்தவேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
10.பொருள்: உறுப்பினர்களுக்கு பணப்பயன். |
தீர்மானம்: சந்தா வசூலிப்பது சங்கத்தினை உறுப்பினர்களின் நன்மைக்கும் நோக்கங்களை அடையவும் மட்டுமே பயன்படுத்தப்படும் அதாவது சட்டப்படி உறுப்பினர்களுக்கு எந்த நேரடி பணப்பயனும் இல்லை என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் உறுப்பினர்களின் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்களின் பயன் தீர்மானிக்கப்பட்ட படி இருக்கலாம் என்றும் சங்கத்தின் சொத்துக்களை விற்று பங்கு பிரிக்க கூடாது எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. இருப்பினும் பரிசுகள் போன்றவை வழங்கலாமென்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
11.பொருள்: நிதி திரட்டும் மற்ற படிவங்கள் அச்சிடுவது மற்றும் பராமரிப்பது. |
தீர்மானம்: நிதி திரட்டுவதற்குண்டான எந்த ஒரு அத்தாட்சியும் (படிவங்கள்) மாநில செயற்குழுவால் மட்டுமே (அச்சிட்டு) வழங்கப்படும் எனவும் வேறு படிவங்களை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும் மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. நிதி தவிர மற்ற பயன்பாடுகளுக்கும் வழங்கப்பட்ட படிவங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். வழங்கப்படாதென தெரிவிக்கப்படும் பட்சத்தில் அங்கிகரிக்கப்பட்ட படிவங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய படிவங்கள் வரிசைக்கிரமமாக எண்ணிட்டு பதிவு செய்து பயன்படுத்தப்பட வேண்டும். |
12.பொருள்:வங்கி நிலையான அறிவுறுத்தல் படிவம்
|
தீர்மானம்: வங்கி நிலையான அறிவுறுத்தல் படிவங்களை உறுப்பினர்களிடம் பெற்று சம்பந்தபட்ட வங்கிகளுக்கு அனுப்பவேண்டும். மேலும் இத்திட்டத்தை தீவிரப்படுத்துவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. தாலுகா கிளை நிர்வாகிகள் முன்னாள் இராணுவத்தினரை அவர்கள் வசிக்குமிடத்தில் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்தவேண்டும். அதற்கு ஊக்கதொகை 01 ஜூலை 2018 முதல் பெறப்படும் ஒவ்வொறு வங்கி படிவத்திற்கும் ரூ50/ வீதமாக படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் சங்க நிதியிலிருந்து வழங்கப்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
13.பொருள்: வங்கி கணக்குகள் துவக்குதல் மற்றும் பறிமாற்றம் செய்ய நிர்வாகிகளை நியமித்தல்:-
|
தீர்மானம்: வங்கிகணக்குகள் துவங்க மற்றும் மூட மாநில செயற்குழுவுக்கு மட்டுமே அதிகாரமுண்டு எனவும் மாவட்ட அல்லது வட்ட செயற்குழுக்கள் வங்கி கணக்கினை பராமரிக்க அல்லது பரிவர்த்தனை செய்ய சம்பந்தப்பட்ட கிளைக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அசாதாரண சூழ்நிலைகளில் வங்கி கணக்கை முடக்கவோ அல்லது பரிவர்த்தணைகளுக்கு வேறு நபர்களை நியமிக்கவோ மாநில செயற்குழுவிற்கு அதிகாரமுண்டு எனவும் இவ்விவகாரத்தில் மாவட்ட செயற்குழுவின் வரம்பில் வரும்பொழுது மாநில செயற்குழு சம்பந்தப்பட்ட மாவட்ட செயற்குழுவின் ஆலோசனைகளை பெற்று அதன்மீது ஆலோசித்து செயல்படவேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. முதலாவது தீர்மானத்தின்படி செயல்பட அனைத்து உறுப்பினர் மற்றும் புதிதாக இணைபவர்களின் விவரம் முன்கூட்டியே நம்மிடம் இல்லை என்பதாலும் பெறப்படும் படிவங்களை பொறுத்து வங்கி கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் துவங்கலாம் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வாறு துவங்கப்படும் வங்கி கணக்குகளை சங்க மாநில செயலாளர் திரு K.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி இணைந்து செயலாற்ற வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள ஆறு வங்கி கணக்குகளையும் சங்க மாநில செயலாளர் திரு K.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி இணைந்து செயலாற்ற வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
14. பொருள்: கிளைகளின் வரவு செலவு கணக்கு பராமரித்தல்:-
|
திர்மானம்: நமது சங்க விதிகளின்படி வட்டம் மற்றும் மாவட்ட கிளை சங்கங்கள் தனித்தனி வங்கி கணக்கு துவக்கி வரவு செலவு கணக்கு பராமரிக்க வேண்டும். ஆனால் நடைமுறை சிக்கல்கள் வந்ததால் சிறப்பு ஏற்பாடாக மாநில பொருளாளர் திரு M.சென்னமூர்த்தி பொதுவாக மாநில கணக்கிலேயே எல்லா வரவு செலவு காட்டலாம் என்றும் கிளை தலைவர் மற்றும் செயலாளர்கள் விதிமுறைகள் படி தனிகணக்கு பராமரிக்க விரைவில் தயாராக வேண்டு மென்றும் ஒருமனதாக தீர்மானிக்கப் படுகின்றது. வட்ட மற்றும் மாவட்ட கிளைகள் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி பரிமாற்றத்திற்கான நபர்களை நியமனம் செய்து கடிதம் அளித்தால் மாநில செயற்குழு (SEC) சார்பில் மாநில பொது செயலாளர் தீர்மானத்தில் பரிந்துறைக்கப்பட்ட வங்கிக்கு கடிதம் வழங்க வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களை வழங்கி கணக்கு துவக்க வேண்டும். அந்த கணக்கை கிளை நியமித்த நபர்கள் பராமரிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
15.பொருள்: நிதி பங்கீடு |
தீர்மானம்: நமது சங்கத்தின் விதிப்படி சந்தா வசூல் நேரடியாக மாநில சங்கத்திற்கும் நுழைவு கட்டணம், நன்கொடை, லெவி ஆகியன தாலுகா சங்கத்திற்கும் முதலில் வரவு வைக்கப்படவேண்டும். பின்னர் சந்தா மாநிலம், மாவட்டம், வட்டம் வாரியாக 40%, 40%, 20% என்கிற விகிதத்தில் பிரித்துக்கொள்வது. மேலும் நுழைவு கட்டனம் மற்றும் நன்கொடை 25%, 25%, 50% என்கிற விகிதத்தில் பகிர வேண்டும். லெவி விதிக்கப்படும் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் நிதி நிலை தேவையான அளவு எட்டாததால் மாநில சங்க கணக்கிலேயே வரவு வைப்பதென்றும் கிளை சங்கங்கள் தேவையான நிதியை மாநில கணக்கிலிருந்தே பெறலாம் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஏற்பாடு அடுத்த பொதுக்குழு கூட்டம் அல்லது மாநாடு வரை நீடிக்கலாம் என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
16.பொருள்: தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி |
தீர்மானம்: சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தேவையான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதில் சிக்கல்கள் மற்றும் காலதாமதம் நேரிடுகின்றது. சங்கம் வளர்ச்சி கண்டு வருவதாலும் புது அமைப்பு படி நிர்வாகிகளின் பங்களிப்பு குறைவாக உள்ளதாலும் மாநில சங்கத்தின் நிர்வாக குழு எல்லா முடிவுகளையும் எடுக்கலாம் என்றும் மற்றும் தீர்மானங்கள், விதிமுறை மாற்றங்கள் செய்யலாமென ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அத்தகைய தீர்மானங்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு சங்கத்தின் வளைதளம், குரல்செய்தி, குறுஞ்செய்தி (SMS), அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்கவேண்டுமெனவும், ஆட்சேபனை இருப்பின் அது ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. ஆன்லைன் (Online) மூலமான கூட்டங்களை அனுமதிப்பது எனவும் மேலும்தீர்மானங்கள் மீது விருப்ப மறுப்புகளை பெற செயலிகளை சங்கத்திற்கு நிதி செலவு இல்லாமல் முடிந்தால் உருவாக்குவதெனவும் பயன்படுத்துவதெனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. |
17.பொருள்: ஆயுள் சந்தா இரத்து |
தீர்மானம்:சங்கத்தின் முன்பு எதிர் பார்த்த ஒரு நோக்கத்திற்காக ஆயுள் சந்தா அறிமுகபடுத்தப்பட்டது. அந்த நோக்கத்திற்கு நிதி பயன்படுத்த இயலாததாலும் தேவையான நிதி பெற முடியாததாலும் செலவினங்கள் தொடர்ந்து ஏற்படுவதாலும் ஆயுள் சந்தா இரத்து செய்யப்பட்டது. அதில் கிடைத்த நிதி செலவினங்களுக்காக முன்பே பயன்படுத்தப்பட்டது. அதற்கான தீர்மானம் 02 ஜூலை 2017 ல் நிறைவேற்றப்பட்டதை மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது. |
18.பொருள்:மாத சந்தா செலுத்தாதவர்கள் நீக்கம் |
தீர்மானம்: சங்கத்தின் விதிமுறைகளின்படி மாத சந்தா செலுத்தாதவர்கள் உறுப்பினர் தகுதி இழப்பர் எனவும் அவ்வாறு சந்தா செலுத்தாதவர்களை நீக்கி உறுப்பினர் பட்டியல் தயாரித்து பதிவாளரிடம் சமர்ப்பிப்பது என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. இந்த முடிவு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு நடைபெற்றுவருவதை பதிவு செய்யப்படுகின்றது. சங்க உறுப்பினர்களுக்கு புதுப்பித்து கொள்வதற்கான அதிக கால அவகாசம் முன்பே கொடுக்கப்பட்டதெனவும் பதிவுசெய்யபடுகின்றது. |
19.பொருள்: சங்கத்தின் முகவரி |
தீர்மானம்: சங்கத்தின் அலுவலக முகவரி கீழ் கண்டவாறு இருக்கும் என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது:- புதிய முகவரி:-
ESSAAA,TN (EX SOLDIERS SAILORS AND AIRMEN ASSOCIATION,TAMILNADU) #9/1,ANNAI ILLAM, 3rd Street, TAMS COLONY, BHARATHIAR ITI COMPOUND, DHARMAPURI. Pin 636701. பழைய முகவரி:- MUNNAAL THARAI KADAL MATRUM VAAN PADAI VEERARGAL SANGAM, TAMILNADU (ESSAAA,TN) No 1,2, IInd Floor, DPS COMPLEX, PIDAMANERI ROAD, DHARMAPURI. PIN 636701.
|
20:பொருள்: சங்கத்தின் பெயர் மாற்றம் |
தீர்மானம்:நமது சங்கம் ஆரம்பிக்கும் பொழுது தேசிய அளவில் உருவாக்கப்படவிருந்த “EX SOLDIERS SAILORS AND AIRMEN ASSOCIATION (ESSAAA)” எனும் சங்கத்தின் ஓர் அங்கமாக துவங்கப்பட்டது. தற்பொழுதும் மேற்கண்ட பெயரில் தேசிய அளவில் ஓர் அமைப்பை நிறுவுவதை முதல் நோக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் பதிவின் போது சட்ட திட்டங்கள் தமிழில் எழுதப்பட்டதால் பெயரும் தமிழில் எழுதப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அனைத்து கடிதங்களிலும்,சின்னம் முத்திரை போன்றவற்றிலும் இணைய தளத்திலும் ஆங்கிலப்பெயரே உபயோகபடுத்தப்பட்டது. பதிவு சான்றில் தமிழில் “முன்னாள் தரை கடல் மற்றும் வான் படை வீரர்கள் சங்கம், தமிழ்நாடு” என இருந்ததால் பான் கார்டுக்கு விண்ணப்பத்திற்காக தமிழ் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. தமிழில் உள்ள பெயர் பதிவுத்துறை வலைதளத்தில் பெயர் உருமாறி தெரிவதால் பெயர் விளங்குவதில்லை. வங்கி பதிவேடுகளிலும் பெயர் முழுவதும் சரியாக பதியப்படுவதில்லை. எனவே சங்கத்தின் பெயரை “ESSAAA TN” என ஆங்கிலத்தில் மாற்றுவது என ஒரு மனதாகதீர்மானிக்கப்படுகின்றது. |
21.பொருள்:உறுப்பினர் பதிவேடு மற்றும் விண்ணப்பத்தை இணையதளத்தில் பராமரித்தல் |
தீர்மானம்: உறுப்பினர் விவரங்களை இணைய தளத்தில் பராமரிப்பதன் மூலம் சேவைகளை விரைவுபடுத்தவும் புதிய சேவைகளையும் வழங்கமுடியுமென்பதாலும் உறுப்பினர் சேர்க்கையும் எளிதாகுமென்பதால் உறுப்பினர் விவரங்கள் http://nmember.essaaa.org என்கிற முகவரி கொண்ட வலைதளத்தில் பராமரிப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது. உறுப்பினர்களின் சந்தா மற்றும் செலுத்திய நிதி விவரங்களை பதிவிடுவது மற்றும் நிலுவையினை உறுப்பினருக்கும் நிர்வாகிகளுக்கும் அறிக்கைகள் அனைவருக்கும் தெரியும் வகையில் அமைப்பை ஏற்படுத்தலாம் என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகின்றது. அந்த இனைய தளத்திற்குறிய பயனாளர் பெயர் மற்றும் கடவுசொல் சிப்பந்திகள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஏனைய நிர்வாகிகளுக்கும் தேவைப்படின் பதிவாளருக்கும் வழங்கலாமென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்றது.
|