ஏன் உண்ணாவிரதப்போராட்டம்?
Submitted by admin on Sat, 01/04/2017 - 20:06
English
Friday, December 16, 2016
இரானுவ கேண்டீன் என்பது முன்னாள் இராணுவ வீரர்களின் வாழ்வின் ஓர் அங்கம். மாதம் ஒன்றிற்கு இரண்டு அல்லது அதற்கு மேலாக கேண்டீனுக்கு செல்லவேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் படும் அல்லல் பலப்பல. நாள் முழுவதும் துயரத்துடன் கழிவதுடன் நீண்ட வரிசை, டோகன் முறை, வேண்டிய பொருள் இல்லாத சூழ் நிலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.கிருஸ்ணகிரி கேண்டீனில் காலை 6 மணிக்கு மழையில் நனைந்துகொண்டே நிற்க வேண்டியிருந்தது. அத்தகைய நிலையை நமது சங்க மாநில செயலாளர் 3 ஜுலை 2011 அன்று பத்திரிக்கைகளில் பிரசிரிக்க செய்ததன் பலனாக கூரையுடன் கூடிய காத்திருக்கும் கூடம் அமைக்கப்பட்டது. இருப்பினும் கூடம் நிரம்பி வழிகிறது. காத்திருக்கும் முறை ,மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே அணுமதிக்கப்பட்ட பயணாளிகளுக்கு அனுமதி போன்ற கற்கால கட்டுப்பாடுகள் இன்றும் நம்மை வாட்டி எடுக்கின்றன. குறிப்பாக கிருஸ்னகிரி கேண்டீன் வாடிக்கையாளர்களும் சரி ,ஊழியர்களும் சரி சிரமத்தைத்தான் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான பயனாளிகள் கேண்டீன் வசதிக்காக பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர். இந்த அல்லல் கிடைக்கும் பொருள் வாங்கவே, குறிப்பிட்ட பொருள் விரும்பி வாங்க வேண்டுமேயானாள் அதற்கு படும் அல்லல் சொல்லொனாதது.. இதற்காக நம் எடுத்த முயற்சிதான் என்ன என்பதையும் பார்ப்போம்.
<>1.2.3.4.5.6.7.8.9.10.11.12.இதற்கிடையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி இயக்குனர்கள் எழுதிய கடித்திற்கு முதலில் ECHS தருவதாகவும் அதன் பின் கேண்டீன் தருவதாகவும் பதில் கிடத்துள்ளது. இரண்டும் உடனே துவங்குங்கள் என்பதே நமது வேண்டுகோள்.
நடவடிக்கைகள் இவ்வாறு இருக்க வேலூரில் மற்றொறு விரிவாக்கம் நடைபெறவிருக்கின்றது என கேள்விப்படுகின்றோம். நாம் முன்னால் இரானுவ வீர்ர்கள் இல்லையா? ஒரே மாவட்டத்தில் மூன்று விரிவாக்க கேண்டீன்கள் இருக்களாம் என்றால் நமது மாவட்டத்திற்கு ஒன்று கூட கொடுக்க முடியாதா? திருச்சியில் இருக்கும் NCC நாமக்கல்லில் கேன்டீன் நடத்தலாம் என்றால் சேலத்தில் இருக்கும் NCC தருமபுரியில் கேன்டீன் நடத்த முடியாதா?. நட்டம் என்றால் இலாபத்திற்கா கேண்டீன் நடத்துகின்றார்கள்?. இங்கு வரும் நட்டம் மற்ற இடத்தில் வரும் லாபத்தில் ஈடுகட்டமுடியாதா? முடியாது என்றால் யாருக்குப்போகிறது அந்தலாபம்? பயனாளிகளுக்காக கேண்டீனா அல்லது ஏதோ ஒரு பெரியவங்க இலபத்திற்காக கேன்டீனா? மக்களின் குமுறல் வீனாகாது. நமது சங்கம் பெருமையாக பொறுமை காத்துள்ளது. இன்று நடக்கும் போராட்டத்திற்கு CSD நிர்வாகத்திற்கு முன்னாள் இரானுவ வீரர்களின் மீதுள்ள வெறுப்பும் சுய நலனும் மற்றுமே காரணம். இதனை இப்போராட்டத்தின் மூலமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். உடனே தருமபுரியில் CSD கேன்டீன் தொடங்கவேண்டும் அது கோவை பிரந்தியத்திலோ அல்லது சேலம் கேண்டீனின் விரிவாக்கமாகவோ இருக்கவேண்டும். ஏற்க மறுக்கும் நிலை வந்தால் போராட்டம் வலுக்கும் என்று எச்சரிக்கின்றோம்.
Post Categories: