முன்னுரை: முன்னாள் இராணுவத்தினர் ,அல்லது அவர்களது குடும்பத்தினர் மேலும் அவர்களது நலனில் அக்கரை உள்ள சம்பந்தப்பட்டவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த வலதளத்தின் நோக்கம் எளிய ,தெளிவான மற்றும் குறிப்பாக வெளிப்படை தன்மையுடன் இந்திய அளவில் செயல்படுவ்து ஆகும். இங்கு உறுப்பினர் சேர்க்கை , வெளிப்படையான நிதி அறிக்கைகள் உடன் அனைத்து உறுப்பினர்களையும் அவர்கள் இருக்குமிடத்திற்கு உள்ள சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறிப்பாக முக்கிய முடிவுகளில் பங்கேற்க செய்வதாகும். அதற்கும் மேலாக உறுப்பினர்களின் பிரச்சினைகளை பெருமளவில் தீர்க்க ஒரு வலிய கட்டமைப்பை வல்லுனர்களின் பங்களிப்பை திரட்டி உருவாக்குவதுமாகும்.
பதிவு செய்வது எப்படி?
படி 1. முதலாவதாக தங்களது அலைபேசி எண்ணை ”Mobile Number” எனும் பெட்டியில் உள்ளீடு செய்யவும். கீழே சரி எனும் குறியீடு வந்தால் உள்ளீடு சரி மற்றும் எண் ஏற்ககூடியது என்பது பொருள். தற்பொழுது அதற்கு கீழே “Send OTP" பொத்தான் தோன்றும். அதனை சொடுக்கவும். சற்று நேரத்திற்குப்பின் தங்களது அலைபேசிக்கு உறுதியாக்கும் என் அணுப்பப்படும். மேலும் ஒரு உள்ளீடு பெட்டியுடன் “Verify OTP” எனும் பொத்தான் தோன்றும். தங்கள் அலைபேசிக்கு வந்த குறியீட்டை உள்ளீடு செய்தபின் பொத்தானை சொடுக்கவும். சிகப்பு நிறத்தில் அறிவிப்பு இல்லை என்றால் தற்பொழுது தங்களது அலைபேசி பதிவு செய்யப்பட்டுவிட்டதாக பொருள்.
படி 2. ”Username" உள்ளீட்டுப்பெட்டியில் தஙளது சுறுக்கப்பெயர் உள்ளீடு செய்யவும். இந்தப்பெயரில் தாங்கள் அறியப்படுவதால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக மற்றும் 20 இலக்கத்திற்குட்பட்டு இருக்கவேண்டும். உங்களது அலைபேசிஎண், பான் எண், வாகன பதிவு எண் போன்றவை பயன்படுத்தலாம். பின்னாளில் மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.
படி 3. ”Password" ம “Confirm Password" பெட்டிகளில் தங்களது கடவு சொல்லை ஒரேமாதிரியாக உள்ளீடு செய்யவும். சிகப்பில் அறிவிப்பு இல்லையென்றால் சரி என பொருள். கடவு சொல்லும் பெயர்குறியீடும் பின்னாளில் வலைதளத்தில் நுழைய தேவைப்படுவதால் பாதுகாக்கவும்.
படி 4. “EMail Address" பெட்டியில் தங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யவும். உங்களிடம் மின்னஞ்சல் இல்லையென்றால் கலைப்பட வேண்டாம் . <உங்கள் அலைபேசி எண்>@essaaa.org. உம். 9442946688@essaaa.org எனும் வகையில் உள்ளீடு செய்யவும். சிகப்பில் அறிவிப்பு இல்லையென்றால் சரி என பொருள்.
படி 5. "Group" எனும் சாளரத்தில் "APPLICANTS(Member)" எனும் பட்டியை தெர்வு செய்யவும். தாங்கள் மற்ற நண்பர்களை சேர்க்கவும் அதன்மூலம் பின்னர் சங்கத்தின் நிர்வாகியாகும் வாய்ப்பை பெற வி்ரும்பினால் "ENROLLMENT ASSOCIATE" எனும்பட்டியை தெர்வு செய்யவும். தாங்கள் மற்ற முன்னாள் இராணுவத்தினர் தனிப்பட்ட ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க மட்டும் உதவிமையத்திற்கு " VETERAN HELP DESK" தொடர்பாளராக செயல்பட விரும்பினால் "VHD VOLUNTEERS" பட்டியை தேர்வு செய்யலாம். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் ” visitor” பட்டியை தெர்வு செய்யவும் .
படி 6. "Fullname" எனும் பெட்டியில் தங்களது முழுப்பெயர் உள்ளீடு செய்யவும். "Address" எனும் பெட்டியில் தங்களது முகவரியையும். "City" எனும் பெட்டியில் தங்களது அல்லது அருகில் உள்ள நகரத்தின் பெயரையும்,உள்ளீடு செய்யவும். "state" எனும் பெட்டியில் தங்களது மாநிலத்தின் பெயரை உள்ளீடு செய்யவும்.
படி 7. கடைசியாக "Sign Up" பொத்தானை சொடுக்கவும்.
.முடிந்தது. பின்னர் சங்கத்தின் சார்பில் நிர்வாகி அல்லது சிப்பந்தி தஙளை தொடர்பு கொள்வர் அல்லது மின்னஞ்சலோ குறுஞ்செய்தியோ அனுப்புவர்.